முருகன் கோயிலை சுற்று வரும் குரங்குகள் - அச்சத்தில் பக்தர்கள்
குரங்குகளின் தொல்லையால் கோவிலுக்கு வர பயப்படும் முருகன் பக்தர்கள்
திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில் குரங்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மலைக்கோவில் வளாகம், தேர்வீதி மற்றும் கோவில் உட்புறத்தில் உள்ள கொடி மரம், பொதுவழி மற்றும் சிறப்பு தரிசனம் வழித்தடங்களில், 70க்கும் மேற்பட்ட குரங்குகள் தொடர்ந்து சுற்றி வருகின்றன.
பக்தர்கள் அர்ச்சனைக்காக கொண்டு வரும் தேங்காய், வாழைப்பழம் மற்றும் குழந்தைகள் வைத்திருக்கும் தின்பண்டங்களை கண்டதும், குரங்குகள் பறித்து செல்கின்றன. எனவே மலைக்கோவிலில் அதிகளவில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story