வேகமாக சென்ற பேருந்தில் இருந்து கீழே விழுந்த மூதாட்டி
தனியார் பேருந்தில் தவறி விழுந்த மூதாட்டி
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த எஸ்.வி.ஜி.புரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனா(65 ). இவர் ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் எஸ்.வி.ஜி.புரம் பகுதியில் ஏறி திருத்தணிக்கு சென்று கொண்டிருந்தார். பின்னர் பேருந்து அதிவேகமாகச் சென்றதால் பீர்குப்பம் பகுதியில் திடீரென்று பிரேக் பிடித்ததால் பேருந்து உள்ளே நின்று கொண்டிருந்த மூதாட்டி எதிர்பாராத விதமாக வெளியில் விழுந்தார்.
அதில் பெரிய அளவில் காயங்கள் இன்றி முகத்திலும் மற்றும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டு அருகில் இருந்த வீரக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் அந்த பேருந்தை சிறை பிடித்தனர். அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.