திருவாதிரை திருவிழா

திருவாதிரை திருவிழா
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கொடியேற்றம்.
திக்குறிச்சி மஹாதேவர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க உலக புகழ்பெற்ற மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் பனிரெண்டு சிவாலயங்கள் உள்ளது. இதில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி ஸ்ரீ மஹாதேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா திருகொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் நிர்மால்ய தரிசனம் ,அபிஷேகம் கணபதிஹோமம் , உஷபூஜை , தீபாரதனை , உஷசிவேலி பந்தீரடி பூஜை ,உச்சபூஜை, உச்சசிவேலி, பஸ்மாபிஷேகம் ,அத்தாழ பூஜை , அத்தாழ சிவேலி, தீபாரதனை , ஸ்ரீ பூதபலி உட்பட பூஜைகள் நடக்க உள்ளன. விழாவின் முக்கிய நாட்களான 24தேதி ஞாயிற்று கிழமை எட்டாம் திருவிழா அன்று பிரதோஷ பூஜையை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் பகவான் எழுந்தருளல் நடக்க உள்ளது. ஒன்பதாம் திருவிழா திங்கள் கிழமை அன்று காலை ஆருத்ராதரிசனம் இரவு பகவான் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்திற்கு வேட்டைக்கு புறபடுதல் நடக்க உள்ளது. பத்தாம் திருவிழா அன்று தாமிரபரணி ஆற்றில் பகவானுக்கு ஆறாட்டு வைகபத்தை தொடர்ந்து திரு கொடி இறக்கி திருவிழா நிறைவடைய உள்ளது. கொடியேற்று நிகழ்வில் தமிழகம், கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story