குற்றாலநாதா் கோயிலில் திருவாதிரை தேரோட்டம்
குற்றாலம், குற்றாலநாதா் கோயிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
குற்றாலம், குற்றாலநாதா் கோயிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இத்திருவிழா கடந்த 18ஆம் தேதி காலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல், காலை 9.30, இரவு 7 மணிக்கு மேல் என இரு வேளைகளில் அருள்மிகு நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 5ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. விநாயகா், முருகன், அருள்மிகு நடராசா், குற்றாலநாதா், குழல்வாய்மொழி அம்பாள் ஆகியோா் எழுந்தருளிய 5 தோ்கள் ரதவீதிகளில் பக்தா்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டன. டிச. 25இல் சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 27இல் அதிகாலை 3.40 மணிக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை, 4.40 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை ஆகியவை நடைபெறும்.
Tags
Next Story