குற்றாலம் கோயிலில் டிச., 18ல் திருவாதிரை கொடியேற்றம்
குற்றாலம் கோயிலில் டிச., 18ல் திருவாதிரை கொடியேற்ற விழா நடக்கிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழா இம்மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான இந்தத் திருவிழா 18ஆம் தேதி காலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். 22ஆம் தேதி தோ் வடம் பிடித்தல், 25ஆம் தேதி சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை, 27ஆம் தேதி அதிகாலை 3.40 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை, 4.40 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா. கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்துவருகின்றனர்.