திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பத்ரகாளியம்மன் கோவில்
திருவாலங்காடு பத்ரகாளியம்மன் மற்றும் வினைதீர்த்த விநாயகர் கோவில்களில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது, திருவாலங்காடு பத்ரகாளியம்மன் மற்றும் வினைதீர்த்த விநாயகர் கோவில். இக்கோவில்களில் நாளை மறுநாள் காலை 9:00 - 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கிராம தேவதை வழிபாடு நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு பத்ரகாளியம்மன் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜையும், மாலை 5:00 மணிக்கு முதல் யாகசாலை பூஜை நடைபெறும். நாளை மறுநாள் காலை 5:00 மணிக்கு நான்காம் யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு மேல் வினைதீர்த்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவும், 10:00 மணிக்கு மேல் பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாட்டை, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி தலைமையிலான ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story