திருவள்ளூர் மாவட்ட செஸ் - சிறுவர்களுக்கு அழைப்பு

திருவள்ளூர் மாவட்ட செஸ் - சிறுவர்களுக்கு அழைப்பு

சதுரங்க போட்டி

திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி
திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், சேதுபாஸ்கரா சுழற்கோப்பைக்கான 28வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளியில், 25ம் தேதி நடக்கிறது. இதில், 10 மற்றும் 13 வயதுக்குட்பட்ட இருபாலர் மற்றும் ஓபன் முறை என்ற, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. பத்து வயதில், 2014 ஜன., 1ம் தேதிக்கு பின், 13 வயதில் 2011 ஜன., 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். ஓபன் பிரிவில் வயது வரம்பு கிடையாது. 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் நடக்கும் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 23ம் தேதிக்குள், பதிவு செய்துக் கொள்ளலாம். விபரங்களுக்கு, 98848 54008, 99414 90200 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

Tags

Next Story