திருவள்ளூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிய அமைச்சர் காந்தி!

திருவள்ளூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கிய அமைச்சர் காந்தி!

மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கிய அமைச்சர்

472 மாணவர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் ஆணைகளை வழங்கிய அமைச்சர் காந்தி.

திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர் தலைமையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் கொண்டாட மாவட்டம் தோறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்விக்கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பாகவும், பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகள் கலந்துகொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் வித்யாலக்ஷ்மி போர்டல் இணையதளம் மூலம் கல்வி கடன் விண்ணப்பித்த472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி மதிப்பீட்டில் கல்வி கடன் ஆணைகளைமாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், துணை பொது மேலாளர் சுசிலா பார்த்தசாரதி, மற்றும் இந்தியன்வங்கி மேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story