திருக்குறள் கழக அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தின விழா
வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருக்கோவலூர் திருக்குறள் கழக அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் தின விழா இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. திருக்கோவலூர் அங்கவை சங்கவை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்குறள் கழக அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் முற்றோதல் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைவர் பாவலர் சிங்கார.உதியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், புலவர் கா.பி.சுப்ரமணியன், இராணுவ வீரர் கு.கல்யாண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.
பண்பாட்டுக்கழகத் துணைத்தலைவர் தே.முருகன் ஐயன் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். ரோட்டரி சங்க செயலாளர் செந்தில்குமார் நூல்களை பரிசாக வழங்கினார். வானவில் ஜெயக்குமார், நாடொப்பன செய் குழு நிர்வாகிகள் கதிர்வேல், சூர்யா, கோவல் நண்பர்கள்குழு, கலைச் சித்தன், பரமசிவம், திருக்குறள் ராஜகோபால், கவிஞர்கள், அ.சிதம்பரநாதன், கவிநிலவன், இராம சுதாகரன்,
வேட்டவலம் தங்க விசுவநாதன், விருது ராஜா, பார்த்தசாரதி, அபூர்வா அகாடமி ராஜாமுருகன், ராதாகிருஷ்ணன், திருவருட்செல்வன், இலக்கியா ஆகியோர் திருக்குறள் அதிகார விளக்கவுரையாற்றினார்கள். முனைவர் வீரநாராயணன் நன்றி கூறினார்.