திருவண்ணாமலை : 21 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஆட்சியர் அலுவலகம்
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதையொட்டி, பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் 21 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் பாஸ் கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
அரசு கேபிள் டிவி நிறுவன தனி தாசில்தாராக பணிபுரிந்த பாதுளசிராமன், வெம்பாக்கம் தாசில் தாராகவும், வெம்பாக்கம் தாசில்தார் மு.கிருஷ்ண மூர்த்தி, செய்யாறு சிப் காட் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். செய்யாறு சிப்காட் தாசில்தார் எஸ்.சம்பத்கு மார், கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு பிரிவு கண் காணிப்பாளராகவும், செய்யாறு துணை தாசில்தார் நீதிபரிபாலன பயிற்சி) டி வெங்கடேசன் பதவி உயர்வின் மூலம் செய்யாறு தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள் னார். செய்யாறு தாசில்தார் எஸ்.முரளி. செய்யாறு கோட்ட கலால் அலுவலராகவும்,
செய்யாறு கோட்ட கலால் அலுலர் தமிழ்மணி, வந் தவாசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், வந்தவாசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்த எஸ். கோமதிபுரானா. செய்யாறு சிப்காட் அலகு-12 தனி தாசில்தாராகவும், செய்யாறு சிப்காட் தனி தாசில்தார் கே.தட்சணா மூர்த்தி, செய்யாறு உதவி கலெக்டரின் நேர்முக உத வியாளராகவும் மாற்றப் பட்டுள்ளனர். அதேபோல், செய் யாறு உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீ.குமரவேலு, செய்யாறு சிப்காட் தாசில்தாராக வும், செய்யாறு சிப்காட் தனி தாசில்தார் ம.சத் தியன், வந்தவாசி ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும், வந்தவாசி ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் கே.திருநாவுகரசு, திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் குறைவு தீர்வு முத்திரை கட்டணம் தனி தாசில் தார் எஸ்.சங்கரன். செங்கம் ஆதி திராவிடர் நலத் துறை தாசில்தாராவும், செங்கம் ஆதிதிராவிடநலத்துறை தாசில்தார் அ.நடராஜன், டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும், டாஸ்மாக் கிடங்கு மேலாளர் எஸ்.ராஜலட்சுமி, செய்யாறு சிப்காட் தாசில்தாராகவும் நியமிக் கப்பட்டுள்ளனர். செய்யாறு சிப்காட் தனி தாசில்தார் எம். கோவிந்தராஜன், திரு வண்ணாமலை அரசு கேபிள் டி.வி தனி தாசில் தாராகவும், செய்யாறு சிப்காட் தனி தாசில்தார் எஸ்.அசோக்குமார், செய்யாறு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும்,
செய்யாறு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மேனகா. ஆரணி வட்ட வழங்கல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆரணி வட்ட வழங்கல் அலுவலர் டி. வெங்கடேசன், செய்யாறு சிப்காட் தாசில் தாராகவும், சென்னை- சேலம் தேசிய பசுமை வழிச்சாலை திட்ட தாசில் தார் தே.புவனேஸ்வரி, திருவண்ணாமலை டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலராகவும், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் கே.சுமதி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட தனி தாசில்தாராகவும், தமிழ் நாடு சாலை மேம்பாட்டு திட்ட தாசில்தார் மணி, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.