சேத்துப்பட்டு : போக்குவரத்து ஆய்வாளர் திடீர் ஆய்வு..!

சேத்துப்பட்டு : போக்குவரத்து ஆய்வாளர் திடீர் ஆய்வு..!
போக்குவரத்து ஆய்வாளர் திடீர் ஆய்வு - ஆட்டோக்கள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் போக்குவரத்து ஆய்வாளர் நடத்திய அதிரடி ஆய்வில் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தேவிகாபுரம் பகுதியில் ஆரணி வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் சேத்துப்பட்டு இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைக்கப்பட்டது பல ஆட்டோக்கள் மாயமாகின. ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் உத்தரவுபடி தேவிகாபுரம் சேத்துப்பட்டு பகுதியில் உரிமம் இல்லாத ஆட்டோக்கள் செயல்படுவதாகவந்த புகாரின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் உத்தரவுப்படி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.தேவிகாபுரத்தில்உரிமம் இல்லாத ஆட்டோக்கள் மறு பதிவு செய்யாத ஆட்டோக்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் நிர்வாகிகள் பதிவு செய்யாத ஆட்டோக்கள் உரிமம் இல்லாத ஆட்டுக்கல் இங்கு பயன்படுத்துவதில்லை மேலும் பதிவு செய்யாத ஆட்டோக்கள் விவரங்களை நாங்களே அலுவலகம் வந்து தருகிறோம் மறுபதிவு செய்து தாருங்கள் என கோரிக்கை வைத்தனர். சேத்துப்பட்டு போளூர் சாலையில் ஆய்வு மேற்கொண்ட போது இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் இல்லாமல் அதிக வேகமாகவும் பயணித்தவர்களையும் ஒளிரும் மின்விளக்குகளை பயன்படுத்துபவர்கள் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறி நான்கு நபர்களுக்கு அபராதம் விதித்தார் மேலும் உரிமம் இல்லாத ஆட்டோக்கள் இரண்டை பறிமுதல் செய்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு செய்யும் தகவல் அறிந்த பல ஆட்டோக்கள் மாயமாகின இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் நிருபர்களிடம் கூறுகையில் சேத்துப்பட்டில்ஆட்டோக்கள் சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது பயணிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன இதை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பல ஆட்டோக்கள் தகவல் அறிந்து ஓடி மறைந்து விட்டது உரிமம் இல்லாத ஆட்கள் பதிவு செய்யாத ஆட்டங்கள் மறுப்பதிவு செய்யாத ஆட்டோக்கள் உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வந்து சரி செய்து கொள்ளவும் தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story