திருவண்ணாமலை : தமிழக அரசு அதிகாரிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எச்சரிக்கை

திருவண்ணாமலை : தமிழக அரசு அதிகாரிகளுக்கு மத்திய இணை அமைச்சர்  எச்சரிக்கை

திருவண்ணாமலையில் மத்திய இணை அமைச்சர் பகவான்கூபா பேட்டி

தமிழகத்தில் பணிபுரியும் காவல் மற்றும் அரசுத்துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மத்திய இணை அமைச்சர் பகவான்கூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை தண்டராம்பட்டு , கொளமஞ்சனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கான கவுரவ தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் பகவன் கூபா கலந்துகொண்டார். பின்னர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக ஆட்சியில் வெளிப்படைத்தன்மையும் ஊழல் அற்ற நிர்வாகமும் நடந்துவருகிறது. ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக பழங்குடியினர் சிறுபான்மையினர் மத்திய அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டும். திமுக அரசு ஊழல் நிறைந்த அரசு. அனைத்து இடங்களிலும் ஊழல் நிறைந்து இருக்கிறது. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் திமுகவின் பணியாளர்களாக செயல்படுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் திமுக சம்பளம் வழங்கவில்லை, மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.திருவண்ணாமலையில் பத்துக்கும் மேற்பட்ட ஜீவசமாதிகளை மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது. திமுகவை சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இதற்குப் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story