மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த திருவண்ணாமலை காவலர்

காவலர் ரகோத்தமனுக்கு பரிசு வழங்கிய டிஜிபி
தமிழ்நாடு காவல்துறையின் சார்பாக போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கிடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு மூலமாக மாநில அளவில் நடத்தப்பட்ட ரீல்ஸ் உருவாக்குதல், ரீமிக்ஸ் பாடல்கள் உருவாக்குதல் மற்றும் கானா பாடல்கள் உருவாக்குதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த கானா பாடல் உருவாக்கும் போட்டியில் மாநில அளவில் முதலிடத்தில் பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு காவல் நிலையத்தில் சேர்ந்த முதல் நிலை காவலர் எண் 1649, ரகோத்தமன் என்பவரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் படைத்தலைவர் சங்கர் ஜி வால் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை ரூபாய் 25 ஆயிரத்தை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் ஆகியோரை நேரில் சந்தித்து ரகோத்தமன் வாழ்த்து பெற்றார்.
