திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூச்செரிதல் விழா!

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூச்செரிதல் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணி வரை பக்தர்கள் அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக செலுத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரதிசி பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான, புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாசி பெருந்திர விழாவை முன்னிட்டு நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது .நேற்று காலை 3 மணி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அலங்கார உர்திகளில் அம்மன் சிலையை வைத்து பூஜித்து திருவப்பூர் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக செலுத்தினார்கள். மேலும் புதுக்கோட்டை மட்டுமல்லாது, புதுக்கோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை, கரம்பக்குடி ,திருமயம், கந்தர்வகோட்டை, விராலிமலை, பொன்னமராவதி, ஆலங்குடி, ஆகிய பகுதியிலிருந்து நூறுக்கும் மேற்பட்ட வாகனங்களில் மின்விளக்குகளால் ஜோடனை செய்யப்பட்டு மலர்களால் அம்மன் சிலை வைக்கப்பட்டு அம்மன் பாடல்கள் பாடுபடி பாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் திருவப்பூரில் உள்ள திடலில் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு பக்தர்களிடம் காணிக்கையாக பெற்ற பூக்களை அம்மனுக்கு செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் அம்மனுக்கு பூ சாத்தும் நிகழ்ச்சி இன்று அதிகாலை ஐந்து மணி வரை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு பூ பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதில் அரசு அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் என ஏராளமான கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story