திருவாரூர் விவசாயிகளே இது உங்களுக்குத்தான்...!

திருவாரூர் விவசாயிகளே இது உங்களுக்குத்தான்...!

 இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், உடனடியாக இணைத்திட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவுறுத்தியுள்ளார். 

இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், உடனடியாக இணைத்திட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவுறுத்தியுள்ளார்.

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 41,476 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு 15 தவணைகளாக தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்திட மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags

Next Story