திருவாரூர் - காரைக்குடி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் - ரயில்வே அறிவிப்பு

திருவாரூர் - காரைக்குடி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் - ரயில்வே அறிவிப்பு
ரயில் சோதனை ஓட்டம்
திருவாரூர் - காரைக்குடி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று பிப்.13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருவாரூர் - காரைக்குடி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று பிப்.13 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பகல் 1மணி முதல் மாலை 5 மணிக்குள் திருவாரூர் - காரைக்குடி இடையே ஓ.எம்.எஸ் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையே 121 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ரயில் செல்லும். எனவே, பொதுமக்கள் ரயில் பாதைகளை கடப்பதையும், மூடியிருக்கும் ரயில்வே கேட்டுகளை கடப்பதையும், ரயில் பாதை அருகில் கால்நடைகள் மேய்ப்பதையும் , செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story