திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவாலங்காடில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு சித்ரா பவுர்ணமியை ஒட்டி 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், பெண்கள் பிரார்த்தனை செய்தனர். திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Next Story