திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர் அருகே கழிப்பிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நெழலி சித்தி விநாயகபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பல வருடங்களாக வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் பொதுக் கழிப்பிடம் வேண்டும் என்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர்யர் கிறிஸ்துராஜிடம் கோரிக்கை மனு அளித்த நிலையில், அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் அரசுக்கு சொந்தமான இடத்தில் பொது கழிப்பிடம் கட்டித் தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது .

இதனிடையே பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி கடந்த 2 தினங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,பொது கழிப்பிடம் கட்டும் இடத்திற்க்கு அருகே வசித்து வரும்.திமுக நிர்வாகி வெங்கடாசலம் என்பவர், பொதுக் கழிப்பிடம் அமைக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு கழிப்பிடம் கட்டும் பணியை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திமுக நிர்வாகி வெங்கடாசலம் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அரசு கழிப்பிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால், வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகளின் சமரசத்தை தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story