திண்டுக்கல்லில் தி.க தலைவர் கி.வீரமணி பிரச்சாரம்

திண்டுக்கல்லில் தி.க தலைவர் கி.வீரமணி பிரச்சாரம்

பிரச்சாரத்தில் ஈடுபட்ட கி. வீரமணி

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆதரித்து திராவிட கழக தலைவர் கி வீரமணி பிரச்சாரம் செய்தார்.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகம் தலைவர் வீரமணி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்ருமான ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது அவர் பேசியதாவது: மதவாதத்தை தமிழகத்தில் நிச்சயமாக புகுத்த முடியாது. மதவாதம் என்பது வேரறுக்கப்பட வேண்டிய விஷயம். பிரதமர் மோடி பிரித்தாலும் சூழ்ச்சியால் இந்திய மக்களை பிரிவினைவாதம் மூலம் பிரித்து வைத்துள்ளார்.

தமிழகத்தில் இது நிச்சயம் நடக்காது. இது பெரியார் மண். அவர் வாழ்ந்த பூமியிலே நிச்சயமாக தாமரை மலராது. மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மோடிக்கு எதிராக தீர்ப்பளிக்க தயாராகி விட்டார்கள். இந்த கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். நான் வெற்றி விழாவில் பங்கேற்பேன், என்றார்.

Tags

Next Story