குமரி தமாகா நிர்வாகி திடீர் விலகல் காங்கிரசில் இணைவு

குமரி தமாகா நிர்வாகி திடீர் விலகல் காங்கிரசில் இணைவு
காங்கிரசில் இணைந்த தமாகா நிர்வாகி
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தாமக பொருளாளர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமாக பொறுப்பில் இருந்தவர் டாக்டர் வி சிவகுமார். தமாகா கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்ததால் அதிருப்தியடைந்த சிவகுமார் அக்கட்சியில் இருந்து விலகி இன்று காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் சிவகுமார் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர தலைவர் மாவட்ட நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாநில பொது செயலாளர் ஆர் எஸ் ராஜன், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரி முருகேசன், வர்த்த காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் ஜெயா காட்வின், மகிளா காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவி வதனா நிஷா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story