தென்காசி அருகே த.மு.மு.க., ம.ம.க. பொதுக்குழு கூட்டம்

தென்காசி அருகே த.மு.மு.க., ம.ம.க. பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

த.மு.மு.க., ம.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த பொட்டல்புதூரில், த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தலைமை வகிக்க, மாவட்ட துணைச் செயலாளர் வரவேற்றார். இந்த கூட்டத்தில், பொட்டல்புதூர் முதல் மாதாபுரம் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும், பொட்டல் புதூரில் துணை சுகாதார நிலையத்தை மினி கிளினிக்காக மாற்ற வேண்டும் என உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் த.மு.மு.க., ம.ம.க. கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story