தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை துவக்கம் மற்றும் கொடியேற்று விழா 

அம்மாபேட்டையில் விவசாயிகள் சங்க கிளை அமைப்பு துவக்க விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருள்மொழிப்பேட்டை, மாரியம்மன் கோவில் ஆகிய இரு இடங்களில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கிளை துவக்கம், கொடியேற்று விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கே.சின்னையன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு அடிமனை, குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் எம்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஏ.நம்பிராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பிரதீப் ராஜ்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி, ஒன்றிய தலைவர் எஸ்.வி. கருப்பையன், ஒன்றிய பொருளாளர் வி.மயில்வாகனன் மற்றும் சங்க நிர்வாகிகள் கே.ராமதாஸ், ஏ.எஸ். சேதுராமன், ஜி.விஸ்வநாதன், ஆர்.தமிழ் ராணி, கே.முருகேசன், யூ. ஜெயந்த், பி.உஷாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரு இடங்களிலும் 200-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அனைத்து சமய நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது. அவர்களிடம் உரிய தொகையை பெற்றுக் கொண்டு பட்டா வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story