தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.


பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பெரம்பலூர் வட்ட கிளையின் 7-வது பேரவை கூட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூரில் தனியார் அரங்கத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார். வட்ட செயலாளர்ராமையா சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். வட்ட பொருளாளர் சந்திரசேகர் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கருத்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் ஆளவந்தார் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த வாறு 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியமாக தமிழக அரசு வழங்க வேண்டும். ஓய்வூதியர்க ளுக்கு வருமான வரி திட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும். கமுட்டேஷன் பிடித்த காலத்தை 15 ஆண்டில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், கிராம உதவியாளர், கிராமப்புறநூல் கர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850-ஐ தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

Tags

Next Story