முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
எடப்பாடியாரின் தலைமையேற்று 2,000 மேற்பட்ட இளைஞர்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலை அதிமுகவில் இணைந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது :
இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசு கையாளாகாத அரசாக மக்களுடைய வாழ்வாதார ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கின்ற ஒரு அரசாகத்தின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய அணை கட்டும் பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது ஆகவே முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம் என்ற கேரளா அரசு தொடர்ந்து இன்றைக்கு தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கக் கூடியவேலையிலே திமுக அரசு மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது நமது மக்களுடைய வாழ்வாதார மக்கள் ஜீவாதாரம் பரிவாகக் கூடிய ஒரு நிலையை இன்றைக்கு இந்த திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.
தென் தமிழக மக்களுடைய ஜீவாதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் குறிப்பாக ஐந்து மாவட்டங்கள் நம்முடைய மதுரை.தேனி, திண்டுக்கல்,சிவகங்கை,ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுடைய ஜீவாதார உரிமையாக வாழ்வாதார உரிமையாக இருக்கக்கூடிய இந்த அணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுகிற அரசுக்கு உள்ளது. அதையெல்லாம் மறந்து மறந்து மக்கள் நலனை அக்கறையில்லாமல் செயல்படுவது வேதனையாக இருக்கிறது .ஏற்கனவே கேரளா அரசு தொடர்ந்து பிரச்சினை செய்து வருவதில் நமக்கு ரணமாக இருக்கிற மனதிலே வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதாக இந்த திமுக அரசினுடைய நடவடிக்கை அமைந்திருக்கிறது.
அணையை நம்பி மதுரை,திண்டுக்கல்,தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களிலே ஏறத்தாழ 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறோம். இந்த பாசன வசதி கூட கேரளாவினுடைய பிடிவாதத்தால் தான் சுருங்கி இருப்பதை எல்லோரும் அறிவார்கள் 1979 லே அன்றைக்கு 152 அடி தேக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தபோது 79க்கு முன்பாக இருந்த பாசன பரப்பெல்லாம் குறைந்து நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்ததன் காரணமாகத்தான் பாதிப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து பிரச்சனைகளை செய்து கொண்டு வருகிறது இதற்கு நிர ந்தர தீர்வு காண ஜெயலலிதா தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி 142 அடியை உடனடியாக தேக்கி கொள்ளலாம் பேபி அணையை சீரமைத்ததற்கு பிறகு 152 அடியை தேக்கிக் கொள்ளலாம் என்கிற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நம்முடைய வாழ்வாதாரத்தை ஜீவாதாரத்தை காப்பாற்றுகிற இந்த உரிமையை பெற்றுக் கொடுத்தார்கள்.
ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அந்த அரசு அதை காப்பாற்ற தவறிவிட்டது. எப்போதெல்லாம் முயற்சி எடுக்கிறோமோ அப்போது எல்லாம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிற திமுக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கிறதோ உடந்தையாக இருக்கிறதோ என்கிற ஐயம்கூட நமக்கு ஏற்படும் போதுதான் இதுபோன்ற உரத்த குரலிலே பிரச்சனைகளை கேரளா அரசு எழுப்புவதை நாம் வாடிக்கையாக பார்க்கிறோம்
தற்போது 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டிய தீருவோம் என்று ஜனவரி மாதமே கேரளா அரசு செய்திருப்பது உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய இந்த திமுக அரசு மௌனம் காப்பது என்பது நம்முடைய ஜீவாதார உரிமை காவு கொடுக்கின்ற சூழலை பார்க்கின்றோம். ஆகவே சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு இன்றைக்கு மனுதாக்கல் செய்து மீண்டும் பிரச்சனையை கேரளா அரசு ஏற்படுத்தியிருக்கிறது
உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக எட்டு கட்ட ஆய்வுக்கு பிறகு முல்லை பெரியாறு அணை வலிமையாக இருக்கிறது பாதுகாப்பாக இருக்கிறது இன்னும் பல நூறு ஆண்டுகள் இது மிகவும் பாதுகாப்பானது என்பதை தெள்ளத் தெளிவாக நிபுணர்கள் குழுவோடு தெரிவித்துள்ள்ளார்கள்.தீர்வு காண்பதற்கு ஜெயலலிதா உச்சநீதிமன்றத்திலே நமக்கு தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்து இதே மதுரையில் மாநாடு நடத்தினார்கள். ஒட்டுமொத்த விவசாயிகள் பங்கேற்றும் நடத்திக் காட்டினார்கள்.இன்றைக்கு தமிழன் உரிமை எங்கே போனது என்று கேட்கிற ஒரு சூழ்நிலையில் திமுக அரசு மவுனம் சாதிப்பது நமக்கு வேதனையாக இருக்கிறது என்றார்.