தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம்
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது,மாநிலச் செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், வட்ட பொருளாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன்,ஆகியோர் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர். இதில், ஈ டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு வாரியமே தினக்கூலி வழங்கிட வேண்டும், நிரந்தர பதவிகளை நிரப்பாமல் காலி பணியிடங்களை அவுட்சோர்சிங் விடுகின்ற நடவடிக்கையை கைவிட வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு ஆர்பாட்டதிலும் ஈடுபட்டனர். இந்த தர்ணா போரட்டத்தில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் அரியலூர் கோட்ட செயலாளர் கண்ணன். மற்றும் நிர்வாகிகள் அபிமன்னன், தர்மராஜ், கருப்புசாமி, வினோதன், மாரிமுத்து, கருப்பையா, கலைச்செல்வன், மூர்த்தி, மலரவன், சுப்பிரமணி, சங்கர், மேலும் சிஐடியு மாவாட்ட தலைவர் ரெங்கநாதன், மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு, மாவட்ட செயலாளர் ராஜகுமாரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.