அறநிலையத்துறை கோவில் கடைகள், ஸ்டால்கள் ரூ.2 .42 கோடிக்கு ஏலம்
கடைகள் ஏலம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 490 கோவில்கள் உள்ளன. இதில் முக்கிய கோயில்களான சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜர் கோவில், குமாரகோவில் சுப்பிரமணிய கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆகியவை அதிக வருமானம் உள்ள முக்கிய கோவில்களாக உள்ளன.
கோவிலில் உள்ளே இயங்கி வரும் பிரசாத ஸ்டால், பன்னீர், பூமாலை, புத்த த கடை ஆகியவை ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இந்த ஆண்டுக்கான ஏலம் விடும் நிகழ்ச்சி சுசிந்திரம் தேவசம் அலுவலகத்தில் இணை ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில் நடந்தது. இதில் குமரி மாவட்டத்தில் கோயில்கள் நிர்வாக அரங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். இந்த வருடம் முக்கிய கோவில்களில் மொத்தம் 2 கோடியே 42 லட்சத்து 71 ஆயிரத்து 750 ௹பாய்க்கு ஏலம் போனது .