TNPL ஆலைய அருகே மயங்கி விழுந்த லோடுமேன் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

TNPL ஆலைய அருகே மயங்கி விழுந்த லோடுமேன் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.
TNPL ஆலைய அருகே மயங்கி விழுந்த லோடுமேன் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், தொண்டமாங்கினம் அருகே உள்ள சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 58. இவர் அருகில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனமான டிஎன்பிஎல் ஆலையில் லோடுமேன் ஆக பணியாற்றி வந்தார். ஆகஸ்டு 6-ம் தேதி மதியம் 12:30 மணியிலிருந்து 1 :45- மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், டிஎன்பிஎல் ஆலை குடோன் அருகே உள்ள டாய்லெட்க்கு சென்ற ஆறுமுகம் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆறுமுகம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஆறுமுகத்தின் மனைவி அஞ்சலை வயது 50 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story