TNPL நிறுவனத்தில் வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்.
Karur King 24x7 |28 Aug 2024 6:12 AM GMT
TNPL நிறுவனத்தில் வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்.
TNPL நிறுவனத்தில் வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம். கரூர் வருமான வரி அலுவலகம் சார்பாக, வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (TNPL), நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருமான வரி அலுவலர் R.சேகர், வரவேற்றுப் பேசினார். வருமான வரி ஆய்வாளர் இதய பென்சிகர் காணொலி மூலம் வருமான வரி நடைமுறைகள் பற்றி விளக்கினார். வருமான வரியின் நோக்கம், வரி செலுத்துவோரின் கடமைகள் மற்றும் உரிமைகள் பற்றி விளக்கப்பட்டன. வருமான வரி ஏய்ப்புகள் குறித்து பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் தந்தனர். வருமான வரியைத் தவிர்க்க போலியான ஆவணங்கள் மூலம் வரிக்கணக்கு தாக்கல் செய்வதால், ஏற்படும் கடுமையான விளைவுகள் குறித்து விவரிக்கப்பட்டது. மேலும், வருமான வரி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் TNPL GM(HR) கலைச்செல்வன் DGM (Finance) சுபாஷிஸ் முன்னிலை வகித்தனர். வருமான வரி ஆய்வாளர் கார்த்திக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவில் வருமான வரி ஆய்வாளர் மீனாட்சி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் வருமான வரி அலுவலர் சௌந்தரராஜன், வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட TNPL ஊழியர்கள் பங்கேற்றனர்.
Next Story