TNPL நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !!

TNPL நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !!

வழக்கு பதிவு 

TNPL நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

TNPL நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா காகிதபுரம் TNPL காலனி பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் மகன் கருப்பண்ணன் வயது 51. இவர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் ஊழியராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் மே 10-ம் தேதி மதியம் 1:45- மணி அளவில் டி என் பி எல் காலனி பகுதியில் உள்ள அவரது வீடு அருகே, திடீரென மயங்கி விழுந்தார் கருப்பண்ணன். உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து கருப்பண்ணனின் மனைவி கீதா வயது 47 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கருப்பண்ணனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story