நாகப்பட்டினத்தில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு

நாகப்பட்டினத்தில் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்

நாகப்பட்டினம் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GR-I முதல்நிலை தேர்விற்க்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 (TNPSC GROUP I தேர்விற்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி 1-ற்கான முதல்நிலை தேர்விற்கு (TNPSC GROUP I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு 25.04.2024 (வியாழன்கிழமை) முதல் தினசரி பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி வரை நடைப்பெற்று வருகிறது.

அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story