டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு, 61 மையங்களில் 18,169 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு, 61 மையங்களில் 18,169 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூன் ஒன்பதாம் தேதி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு, 61 மையங்களில் 18,169 பேர் தேர்வு எழுதுகின்றனர்... தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையத்தால் ஜூன் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் ஒருங் கிணைந்த குடிமைப்பணி கள் குரூப்-4 தேர்வில், பெரம்பலூர் மாவட்டத்தில் 61தேர்வு மையங்களில் 18,169 பேர் தேர் தேர்வுஎழுத உள்ளனர்.

இந்த தேர் வர்கள், தேர்வு எழுத ஏது வாக அனைத்து தேர்வு மையங்களிலும் நாற்காலி வசதிகள், சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், வெளிச்சம் மற் றும் மின்வசதி, போதிய காற்றோட்ட வசதி, தேர்வு கூடங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி போன்ற அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கூட அனுமதி சீட்டு ஹால் டிக்கெட் உள்ள தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையங் களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் தேர்வு நாளன்று காலை 8 மணிக்குள் அவருக்குரிய தேர்வு மையங்களுக்கு வரவேண்டும். காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக் குள் தேர்வர்கள் அனுமதிக் கப்படமாட்டா ர்கள். தேர்வர்கள் கருப்பு பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் தங்கள் போட்டோ அடையாளத் திற்கான ஆதார் போன்ற ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையினை வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பென்சில், ரப்பர், செல்போன், கால்குலேட்டர், எலெக்ட்ரானிக் வாட்ச் மற்றும் ப்ளூடூத் சாதனம் போன்ற எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. மேலும் தேர்வர்கள் வினாத்தாளில் உள்ள அனைத்து வினாக் களுக்கும் பதிலளிக்க வேண்டும் எனவும் பதில் தெரியாத வினாக்களுக்கு ஆப்சன் இ-யை கட்டா யம் தேர்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story