குமரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு 2-ம் தேதி

குமரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு 2-ம் தேதி
X

இலவச தேர்வு

கன்னியாகுமரி பயோனியர் குமாரசாமி கல்லூரியில் குரூப் 4 இலவச மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட மைய நூலகர் மேரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வு வருகிற 9- 6 - 2024 அன்று நடக்கிறது. இந்த தேர்வில் வெற்றி பெற கன்னியாகுமரி மாவட்ட மைய நூலகம், டாக்டர் கே பத்மநாபன் பயோனியார் அகாடமி மற்றும் பயோனியர் குமாரசாமி கல்லூரியும் இணைந்து இலவச மாதிரி தேர்வை நடத்துகிறது.

குமாரசாமி கல்லூரியில் வருகிறது 2-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது. இலவச மாதிரி தேர்வு எழுத விரும்புவர்கள் 8124005588, 81 2400 6688 என்ற எண்களில் பதிவு செய்து, தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story