TNPSC GROUP - I பயிற்சி வகுப்புகள் 26.03.2025 முதல் நடைபெறவுள்ளது

X
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் TNPSC GROUP - I பயிற்சி வகுப்புகள் 26.03.2025 முதல் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் வாயிலாக பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2025 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் TNPSC GROUP – I தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. துணை ஆட்சியர், துணை காவல் காணிப்பாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் போன்ற பல்வேறு பணிகளுக்கு அறிக்கை வெளியிடப்பட உள்ளது. ஜீன் – 15ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்ட படிப்பு ஆகும். மேலும், விவரங்களை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தற்போது TNPSC GROUP - I தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் 26.03.2025 முதல் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் பயன்பெறும் பொருட்டு இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் திறனறி பலகை மற்றும் வசதியுடன் கூடிய வகுப்பறைகள், வாரத்தின் அனைத்து வேலைநாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். போட்டித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் எடுக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வு ஆர்வலர்கள் நேரிலோ, அல்லது 94990 55913 என்ற பெரம்பலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story

