தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தரிடம் ரூ. 15 ஆயிரம் திருட்டு !
தஞ்சாவூர்
தஞ்சாவூர் பெரியகோயிலில் புதன்கிழமை பக்தரிடம் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் பெரியகோயிலில் புதன்கிழமை பக்தரிடம் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்தவர் லட்சுமண குமார். தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சுற்றுலாவாக தமிழகத்துக்கு வந்துள்ள இவர், தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு புதன்கிழமை மாலை சென்றார். அப்போது, பிரதோஷ வழிபாடு நடைபெற்றதால் கூட்டம் அதிகமாக இருந்தது. சன்னதிகளில் வழிபட்ட இவர் கேரளாந்தகன் கோபுரம் அருகே வந்தபோது, தனது கால் சட்டைப் பையைத் தடவி பார்த்தபோது பிளேடால் கிழிக்கப்பட்டிருப்பதும், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story