மளிகை பொருட்கள் வாங்க வந்தவரிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்
பணம் பறிமுதல்
மளிகை பொருட்கள் வாங்க வந்தவரிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்
சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் வேளான்துறை உதவி பொறியாளர் இளையராஜா தலைமையிலான தேர்தல் நிலைக்குழு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் காரில் ரூ. 2 லட்சம் பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் (வயது52) என்பது தெரியவந்தது. கோவில் நிகழ்ச்சிக்காக மளிகை பொருள் வாங்குவதற்கு செவ்வாய்பேட்டைக்கு ரூ. 2 லட்சம் பணம் எடுத்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை. அதனால் அவர் கொண்டு வந்த ரூ 2 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆர்டிஓ வுமான அம்பாயிரநாதனிடம் ஒப்படைத்தனர்.
Next Story