முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் - சிறுகுறு விவசாயிகள் கோரிக்கை

சிறுகுறு விவசாயிகள் நிலையறிந்து பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு 2ரூ மானியம் வழங்கிய முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க நேரம் கேட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்த நீலகிரி விவசாயிகள்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக தேயிலை விவசாயமும் சுற்றுலாவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 66,000 சிறு குறு பசுந்தேயிலை விவசாயிகள் உள்ள நிலையில், அவர்கள் கொள்முதல் செய்யக்கூடிய தேயிலைக்குவிலை நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரம் மத்திய அரசின் தென்னிந்திய தேயிலை வாரியத்திற்கு மட்டுமே உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டு பா.ஜ.க., ஆட்சியில் பசுந்தேயிலை விவசாயிகளை மோடி அரசு கண்டுகொள்ளாத நிலையில் பசுந்தேயிலை ஒரு கிலோ மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடும் சரிவை சந்தித்து வந்தனர் இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் முதல் கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அங்கத்தினராக உள்ள 25 ஆயிரம் சிறு விவசாயிகளுக்கு அவர்கள் கொள்முதல் செய்யும் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் உறுப்பினர்களாக உள்ள பசுந்தேயிலை விவசாயிகள் சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்களின் சங்க பிரதிநிதிகளும் விவசாயிகளும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தேயிலை விவசாயிகள் தங்களது நன்றியினை தெரிவிக்க நேரம் பெற்றுத் தருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story