ஊட்டியில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மும்முரம்
அதிகாரிகள் ஆய்வு
சுற்றுலா நகரமான ஊட்டியில் உலகப் புகழ்பெற்ற அரசுத் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்கள் உள்ளன.
இவற்றை காண கேரளா, கர்நாடகா மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோடை சீஸனின் போது குறுகிய நகரமான ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இப்படி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிதாக பார்க்கிங் வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம், காவல்துறை, சுற்றுலாத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து சேரிங்கிராஸ், ஆவின் பாலகம், தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த ஆய்வு மேற்கொண்டனர்..