பூச்சி மருந்து தெளிக்க... ட்ரோன் இயந்திரம் !
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்சேவை மையங்கள் திட்டத்தின் மூலம் பல்வேறு வேளாண் சார்ந்த இயந்திரங்கள், வாகனங்கள் வாங்கப்பட்டு கூட்டுறவு நிறுவனங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக அருப்புக்கோட்டை வட்டம், பாளையம்பட்டி கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 6, 20,000 மதிப்பிலான கொள்முதல் செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் டிரோன் இயந்திரம் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது.
பாலையம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் டிரோன் இயந்திரம் மூலம் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் ட்ரோன் மூலம் குறைந்த வாடகை கட்டணத்தில் மருந்து தெளிக்க உபயோகித்துக் கொள்ளலாம். இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு 10 நிமிடத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கலாம் எனவும். ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்ச வாடகை கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். சங்கத்திலிருந்து டிரோன் கொண்டு செல்வதற்கு தூரத்திற்கு ஏற்ப போக்குவரத்து செலவு மாறுபடும். இவை தனியாக செலுத்தப்பட வேண்டும். 5 ஏக்கருக்கு மேல் டிரோன் உபயோகம் தேவைப்பட்டால் குறைந்தபட்ச கட்டணமே வசூல் செய்யப்படும். பூச்சி கொல்லி மருந்து தெளிப்பதற்கு இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் கூலி ஆட்கள் தேவையில்லை.
ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிப்பதற்கு 11 லிட்டர் தண்ணீர் மட்டுமே போதுமானது இயந்திரத்தின் மூலம் மேலிருந்து மருந்து தெளிப்பதினால் அனைத்து பயிர்களுக்கும் மருந்து சீராக சென்றடைகிறது. ஆட்கள் மூலம் மருந்து தெளிப்பதால் ஏற்படும் உடல் உபாதைகள் தடுக்கப்படுகிறது. சோளம், மக்காச்சோளம், தென்னை, முருங்கை மற்றும் கொடிக்கால் போன்ற பயிர்களுக்கும் இந்த இயந்திரன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கலாம். மாவட்டத்தில் எங்கு அழைத்தாலும் உடனடியாக சென்று மருந்து அடித்து தரப்படும். மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு சங்கத்தின் செயலாளரை அலைபேசி எண். 75987-15747 மற்றும் 80729 - 27415-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.