திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று சோழிய வேளாளர் மண்டகப்படி
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் சோழிய வேளாளர் மண்டபம் நடந்தது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் முதல் நாள் பூத்த மலர் பூ அலங்காரம் மண்டகப்பட்டு நடந்தது. மறுநாள் பூச்சொரிதல் விழா நடந்தது. இந்நிலையில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திண்டுக்கல் சோழிய வேளாளர் மண்டகப்படி இன்று நடந்தது. இந்த மண்டகபடியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர். திண்டுக்கல் மேற்கு , கிழக்கு ரத வீதிகளில் சுற்றி நான்குரத வீதி ஊர்வலம் வந்தது. வழிநெடுகிலும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பக்தர்கள் தீச்சட்டி எடுத்து பலர் வலம் வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாரை தப்பட்டை முழங்க இளைஞர்கள் நடனமாடி வந்தனர்.
Next Story