தென்காசி மாவட்டத்தில் நிவாரணத் தொகை பெற இன்று கடைசி வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் நிவாரணத் தொகை பெற இன்று கடைசி வாய்ப்பு

 நிவாரணத் தொகை

நிவாரணத் தொகை பெற இன்று கடைசி வாய்ப்பு
தென்காசி மாவட்டத்தில் அரசு அறிவித்த நிவாரண நிதி பெறுவதற்கு புதன்கிழமை (ஜன.3) கடைசி வாய்ப்பு என ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 8 வட்டங்களுக்கு ரூ.1,000 சிறப்பு வெள்ள நிவாரண நிதியாக கடந்த டிச.29ஆம் தேதி முதல் வழங்ககப்பட்டு வந்தது. செவ்வாய்க்கிழமை (ஜன.2) மாலை4 மணி வரை 91 சதவீதத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் பெறாதவா்கள், டோக்கன் பெற்றும் உரிய நேரத்தில் வர இயலாதவா்கள், டோக்கன் தவறவிட்டவா்கள் இதுவரை நிவாரண நிதி பெற வில்லையெனில், புதன்கிழமை மாலை 5 மணி வரை கடைசி வாய்ப்பாக கைரேகை வைத்து நிதியுதவி பெற்றுக்கொள்ளலாம். வழக்கமான ரேஷன் பொருள்கள் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கும். பொங்கல் பண்டிகை வர இருப்பதால், நிவாரணத் தொகை பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது எனக் கூறியுள்ளாா்.

Tags

Next Story