குறிஞ்சிப்பாடி: தையல் தொழிலாளர்கள் தின பேரணி

குறிஞ்சிப்பாடி: தையல் தொழிலாளர்கள் தின பேரணி

தையல் தொழிலாளர்கள் தின பேரணி

தையற் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிபாடியில் தமிழ்நாடு தையற்கலை முன்னேற்ற சங்கம் கிளை சார்பாக நடைபெற்ற பேரணியில் ஏராளமான தையற் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

தையற் கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி கிளையின் தமிழ்நாடு தையற்கலை முன்னேற்ற சங்கம் கிளை தலைவர் வி. அசோக் தலைமை தாங்கி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கடைவீதி பெருமத்தூரான் வீதி ராஜவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள கொடி கம்பத்தில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சங்க மாநில பிரதிநிதி ஆர். சீனுவாசன் ன, கிளைப் பொறுப்பாளர்கள் அஜிஸ்கான், சிங்காரவேல்,ராமலிங்கம், ஜோதிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் பெருமாள் செயலாளர் குமார், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தையர் கலைஞர்கள் பேரணியில் கலந்து கொண்டு தையற்கலைஞர்கள் தினத்தை கொண்டாடினர்.

Tags

Next Story