தனியார் துண்டு நிறுவனம் மூலம் அரசுப் பள்ளிக்கு கழிப்பறை வசதி
ராமநாதபுரம் கமுதி அருகே தனியார் சோலார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளியில்கழிப்பறை வசதி செய்துத்தரப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே குண்டு குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறை சேதமடைந்து காணப் பட்டதால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதி யில் இயங்கி வரும் அதானி தனியார் சோலார் நிறுவன அறக்கட்டளை சார்பில், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில், மாணவ, மாணவிகளுக்கு கழிப்பறை வசதி கட்டிகொடுக்கப்பட்டு அதன்திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரி கண்ணன், பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதாகர் ஆகியோர் தலைமை தாங்கி துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சி யில் மக்கள் தொடர்பு அதிகாரி ஜெனார்தனன்,மற்றும் பள்ளி ஆசிரியர் கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதே போல் அதானி தனியார் சோலார் நிறுவன அறக்கட்டளை சார்பில், தோப்படைப்பட்டி கிராமத்தில் உள்ள சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதற்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளை சார்பில், கமுதி சுற்று வட்டார பகுதியில் உள்ளஏராளமான அரசு பள்ளி களுக்கு கழிப்பறை வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர் ஓ பிளாண்ட் அமைத்தல், விவசாயிகளுக்குஇலவச விதைகள் மற்றும் மரக்கன்றுகள் அவ்வப் போது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.