தண்ணீர் வசதி இல்லாத கழிப்பறை மேட்டுக்குப்பம் அங்கன்வாடியின் அவலம்

தண்ணீர் வசதி இல்லாத கழிப்பறை மேட்டுக்குப்பம் அங்கன்வாடியின் அவலம்

மேட்டுக்குப்பம் அங்கன்வாடியில் குழந்தைகள் கழிப்பறையை பயன்படுத்தும்போது, அங்கன்வாடி ஊழியர்கள், பக்கெட்டில் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது

மேட்டுக்குப்பம் அங்கன்வாடியில் குழந்தைகள் கழிப்பறையை பயன்படுத்தும்போது, அங்கன்வாடி ஊழியர்கள், பக்கெட்டில் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது

காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் ஊராட்சி, மேட்டுக்குப்பம் கிராமத்தில், கழிப்பறை வசதியுடன் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இம்மையத்தில் உள்ள கழிப்பறைக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இங்கு பயிலும் குழந்தைகளும், அங்கன்வாடி மைய ஊழியர்களும் கழிப்பறையை முறையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

குழந்தைகள் கழிப்பறையை பயன்படுத்தும்போது, அங்கன்வாடி ஊழியர்கள், பக்கெட்டில் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, அங்கன்வாடி மைய கழிப்பறையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மினிடேங்க் அமைத்து குழாய்க்கு இணைப்பு வழங்கி தண்ணீர் வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story