தொல்காப்பியர் அறக்கட்டளை ஆலோசனை கூட்டம்

தொல்காப்பியர் அறக்கட்டளை ஆலோசனை கூட்டம்

கப்புகாடு பகுதியில் தொல்காப்பியர் அறக்கட்டளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கப்புகாடு பகுதியில் தொல்காப்பியர் அறக்கட்டளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொல்காப்பியர் அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம் தலைவர் புலவர் சுந்தரராசன் அவர்கள் தலைமையில் காப்புக்காடு, தொல்காப்பியர் சிலை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. புலவர் ஐயப்பன் தமிழ் வாழ்த்துப் பாடினார். பொருளாளர் பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் சஜீவ் செயல்பாட்டுரை வழங்கினார். தொடர்ந்து புலவர் கு.இரவீந்திரன் தொல்காப்பியர் குறித்து சிறப்புரை ஆற்றினார். பின்னர் தொல்காப்பியரின் 2735 ஆவது பிறந்த நாள் விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வருகின்ற ஏப்ரல் 23 ம் தியதி சித்திரை முழுமதி நாளான செவ்வாய்க்கிழமை நடைபெறும் விழாவானது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது. அவ்விழாவின் போது காலை 8.30 மணிக்கு முதல் நிகழ்வாக மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி நடத்திட தீர்மானிக்கப்பட்டது.

அனைவருக்கும் பொதுவாக " தமிழளந்த பெருமான் தொல்காப்பியர்" என்னும் தலைப்பில் போட்டி நடைபெறும். அன்றைய தினமே பெயர் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம். முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் போட்டியாளர்களுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழும் அவ்வமயம் வழங்கப்படும். மட்டுமின்றி தமிழுக்கு தொண்டாற்றும் ஒருவருக்கு தொல்காப்பியர் அறக்கட்டளை விருதும் வழங்கப்படவிருக்கிறது. இக்கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் சிந்துகுமார் , கேப்டன் பென்னட் சிங், தமிழ்ச்செம்மல் லாசர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அறக்கட்டளை உறுப்பினர்களான கோவிந்தராஜ், ரெவிந்திரன், புலவர் கோவிந்தநாதன் வின்சென்ட், பிரான்சிஸ், பேபி, புனித தேவகுமார் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். சுரேஷ் அனைவருக்கும் தேநீர் வழங்கி சிறப்பித்தார். மோகனகுமார் நன்றி கூறினார்.

Tags

Next Story