தொல்காப்பியரின் 2735 ஆவது பிறந்த நாள் விழா

தொல்காப்பியரின் 2735 ஆவது பிறந்த நாள் விழா

தமிழ் பெரும் புலவர் தொல்காப்பியரின் 2735 ஆவது பிறந்த நாள் விழா காப்புக்காட்டில் அமைந்திருக்கும் தொல்காப்பியர் சிலை வளாகத்தில் கொண்டாடப்பட்டது.


தமிழ் பெரும் புலவர் தொல்காப்பியரின் 2735 ஆவது பிறந்த நாள் விழா காப்புக்காட்டில் அமைந்திருக்கும் தொல்காப்பியர் சிலை வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறை, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை, தொல்காப்பியர் அறக்கட்டளை இணைந்து நடத்திய விழாவில் அனைத்திந்தியத் தமிழ் சங்கப் பேரவை அமைப்புச் செயலாளர் புலவர் சுந்தரராசன், தொல்காப்பியர் அறக்கட்டளை செயலாளர் சஜீவ், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் அம்பை தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் புலவர் ஐயப்பன் அவர்களுக்கு தொல்காப்பியர் அறக்கட்டளை விருது வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி மாணாக்கர்களுக்கானகட்டுரைப் போட்டி ' தமிழளந்த பெருமான் தொல்காப்பியர்' என்னும் தலைப்பில் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.விழாவில் குமரி முத்தமிழ் மன்றத் தலைவர் தமிழ்ச் செம்மல் முளங்குழி பா. லாசர், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சிந்து குமார், அதங்கோட்டாசான் அறக்கட்டளைத் தலைவர் கோவிந்தநாதன், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் வேலையன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் இராஜேஷ் பாபு உட்பட பலர்கலந்து கொண்டனர்.

Tags

Next Story