கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமல்

கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமல்

கப்பலூர் சுங்கச்சாவடி

கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ஐந்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும் மாதாந்திர கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் ஏப்ரல் மாதம் அமல் படுத்த வேண்டிய சுங்கச்சாவடி கட்டண உயர்வு நள்ளிரவு முதல் தமிழகத்தில் 36 சுங்கசாவடிகளில் அமலுக்கு வந்தது. ஐந்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலும் மாதாந்திர கட்டணம் 100 ரூபாய் இருந்து 400 ரூபாய் வரையிலும் கப்பலூர் சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்டுள்ளது ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தேசிய நெடுஞ்சாலை எண் 44 ல் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.

இதே போல் இந்த ஆண்டும் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சுங்க கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் நிறைவு பெற்றதை 3ம் தேதிநள்ளிரவு முதல் நாடு முழுவதும் சுங்க கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து நள்ளிரவு முதல் தமிழகத்தில் 36சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியிலும் நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

பழைய கட்டணத்திலிருந்து புதிய கட்டணமாக ஐந்து ரூபாய் முதல் 25ரூபாய் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சென்று வர கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஏற்கனவே இருந்த கட்டணத்தில் மாற்றமின்றி ஒரு முறை செல்ல 100 ரூபாய், இருமுறை சென்றுவர 150 மாதாந்திர கட்டணமாக ரூ.3,360 இதேபோல் வேன் மினி பஸ் வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல 165 ரூபாய் இருமுறை பயணத்திற்கு 245 ரூபாய் மாதாந்திர கட்டணம் 5430 ரூபாய் ஆகவும் இரண்டு அச்சு வாகனங்கள், பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் 340 ரூபாய் இருமுறை கட்டணமாக 510 ரூபாய், மாதாந்திர கட்டணம் 11, 380ரூபாய் மூன்று அச்சு வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல 370 ரூபாய் இருமுறை பயணத்திற்கு 560 ரூபாய் மாதாந்திர கட்டணமாக 12,410 ரூபாயாகவும் கனரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல 535 ரூபாய் இருமுறை பயணத்திற்கு 805 ரூபாய் மாதாந்திர கட்டணம் 17,845 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மிக கனரக வாகனங்களுக்கு ஒரு முறை கட்டணம் 650 இருமுறை சென்றுவர 975 ரூபாய் மாதாந்திர கட்டணமாக 21,720 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் கப்பலூர் சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வணிகரீதி அல்லாத வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணமாக ரூபாய் 330 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story