தக்காளி அறுவடை பணிகள் தீவிரம்

தக்காளி அறுவடை பணிகள் தீவிரம்

தக்காளி அறுவடை

சேலம் மாவட்டம், தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

சேலம் மாவட்டம், தேவூர் சுற்றுவட்டார பகுதிகளான ஒக்கிலிப்பட்டி, வட்ராம்பாளையம், மோட்டூர், மெய்யமலத்தான்காடு, எல்லப்பாளையம், பச்சபாழையூர், ஆலத்தூர், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி 3 மாதத்தில் அறுவடைக்கு வரக்கூடிய தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது செடிகளில் தக்காளி பழம் அதிகளவில் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதையொட்டி விவசாயிகள் கூலித்தொழிலாளர்கள் மூலம் தக்காளிகளை அறுவடை செய்து வருகின்றனர். இங்கு கிடைக்கும் தக்காளிகளை விவசாயிகள் தேவூர், எடப்பாடி, குமாரபாளையம், பவானி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

Tags

Next Story