திருப்பூரில் தக்காளி கிலோ ரூ. 60-க்கு விற்பனை

திருப்பூரில் தக்காளி கிலோ ரூ. 60-க்கு விற்பனை

தக்காளி (பைல் படம்)

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ. 60 க்கு விற்பனையானது. பீன்ஸ், பச்சை மிளகாய் விலை குறைந்தது.

திருப்பூர் பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு உள்ளூர் வரத்து மிகவும் குறைவாக உள்ள நிலையில் ஆந்திரா கர்நாடகா மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 2 வாரங்களாக ஏறு முகத்தில் இருந்த தக்காளி விலை தற்போது ஓவ்வொரு நாளும் படிப்படியாக குறைந்து வருகிறது. மொத்த மார்க்கெட்டில் சுமார் 28 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ. 1400 முதல் ரூ. 1600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ. 1000 முதல் ரூ. 1300 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

சில்லறை விற்பனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ. 80 முதல் ரூ. 90 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 50 முதல் ரூ. 60 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பீன்ஸ் விலையும் குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ பீன்ஸ் அதிகபட்சமாக ரூ. 200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று கிலோ ரூ. 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பச்சை மிளகாய் கடந்த வாரம் கிலோ ரூ. 160 வரைக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒருசில காய்கறிகளின் விலை பெருமளவு குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story