காஞ்சியில் தக்காளி விலை உயர்வு கிலோ ரூ.70க்கு விற்பனை

காஞ்சியில் தக்காளி விலை உயர்வு கிலோ ரூ.70க்கு விற்பனை

தக்காளி 

காஞ்சிபுரத்தில் 10 நாட்களுக்கு முன், 3 கிலோ 50 ரூபாய்க்கு விற்ற தக்காளி,1 கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது

காஞ்சிபுரத்தில் 10 நாட்களுக்கு முன், 3 கிலோ 50 ரூபாய்க்கு விற்ற தக்காளி, நேற்று, 1 கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆந்திர மாநிலம், பலமநேரி, புங்கனுார், மதனபள்ளி, கர்நாடக மாநிலத்தில் தாவணிகரை மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டத்தில் தக்காளி பயிரிடப்படுகிறது. இதில், ஆந்திர மாநிலத்தில் விளையும் தக்காளி, காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் 3 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென விலை உயர்ந்து காஞ்சிபுரம் சந்தை மற்றும் நடமாடும் வாகனங்களில் 1 கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து காஞ்சிபுரத்தை காய்கறி வியாபாரி எம்.தனுஷ் கூறியதாவது, ஆந்திராவில் பெய்து வரும் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. மேலும், புதன்கிழமை முகூர்த்த தினமாக இருப்பதால், தக்காளி தேவை அதிகரித்துள்ளதால் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் முதல் தரமான தக்காளி கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story