தக்காளி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு

தக்காளி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு

தக்காளி விலை உயர்வு

பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடு கிடுவென விலை உயர்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் முக்கிய பயிராக தக்காளி பயிர் செய்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி வரத்து அதிகரித்து 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை மற்றும் பருவ கால நிலை மாற்றத்தால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளியின் வரத்து சரிந்துள்ளது.

பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் தினசரி கொண்டுவரப்படும் தக்காளிகள். மாவட்டத்தின் தேவைக்கு ஏற்ப போக மற்றவை சென்னை,தேனி, திண்டுக்கல், நாமக்கல்,சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் 16 கிலோ எடை கொண்ட ஒரு குடை தக்காளி 850 ரூபாய்க்கு விவசாயி களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உழவர் சந்தைகளிலும் வெளிமார்க்கெட்டுகளில் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story